Tuesday, May 3, 2011

தொழிற்சங்க இயக்கத்தின் ஓர் அணிகலன் -எம்.கே.பாந்தே



சுகுமால் சென்னின், “இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம்:1830-2000 ஆண்டு களில் உருவாகி வளர்ந்திட்ட இயக்கத்தின் வரலாறு” என்னும் நூலைப் படித்தவர்கள், இந்த நூலையும் படிப்பதில் நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு சுகுமால் சென் மிகவும் உழைத்து, உலகத் தொழிற்சங்க இயக்கம் உருவான விதத்தை யும் அதன் வளர்ச்சியையும் இதில் சித்தரித் துள்ளார். 2011 ஏப்ரல் 6 - 10 தேதிகளில் ஏதென்ஸ் நகரில், உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் (றுகுகூரு-றுடிசடன குநனநசயவiடிn டிக கூசயனந ருniடிளே) 16-வது மாநாடு (காங்கிரஸ்) நடைபெற்ற சமயத்தில் இந்நூல் வெளியிடப் பட்டது.

இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஷ், “இந்நூலானது வரலாற்றின் முக்கிய நிகழ்வு களை மிகவும் எளிமையாகவும், நேரடியாக வும், பொருள்பொதிந்த விதத்திலும் முன் வைக்க முயன்றிருக்கிறது. உலகில் பல நாடு களில் இயங்கும் தொழிற்சங்கங்களை நீங்கள் மிகவும் நன்றாக அறிந்துகொள்ள முடியும். இந்நூலின் குறிக்கோள், தொழிலாளர் வர்க்கம், புதிய நிலைமைகளுக்கேற்பத் தம்மை மாற் றியமைத்துக் கொள்ள ஊக்குவித்து, அவர் களைப் போராட்டத்தில் உருக்குபோன்று மேலும் வலுவாக மாற்றியமைத்திட வேண் டும் என்பதேயாகும்” என்று மிகவும் பொருத்த மாகத் தெரிவித்திருக்கிறார். இதன் காரண மாகத்தான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தொழிற்சங்கவாதிகளால் இந் நூல் மிகவும் ஆர்வத்துடன் படிக்கப்படக் கூடியதாக இயற்கையாகவே அமைந்திருக் கிறது.

தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சி

நவீன தொழிலாளர் வர்க்கத்தின் மூலவே ரைக் கண்டுபிடித்து, அதிலிருந்து தன் ஆய் வினை நூலாசிரியர் தொடங்குகிறார். இங்கி லாந்தில் 18ம் நூற்றாண்டின் மத்தியவாக்கில் தொடங்கிய தொழிற்புரட்சி, முதலாளித்துவச் சமுதாயம் உதயமாவதற்கான அடிப்படையை உருவாக்கியது. மிகப்பெரிய அளவில் உற்பத் தியில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்களை இயக்கிட ஆட்கள் அதிகமான அளவில் தேவைப்பட்டனர். அதுநாள்வரை விவசாயத் தில் ஈடுபட்டிருந்தவர்கள் அதனை முற்றிலு மாக துண்டித்துக்கொண்டு, தங்கள் உழைப்பு சக்தியைத் தவிர வேறெதுவும் இல்லாத வர்கள் இத்தகைய எந்திரங்களை இயக்கிட அமர்த்தப்பட்டனர். ஜவுளி, நிலக்கரி, இரும்பு மற்றும் ரயில் - சாலைப் போக்குவரத்துத் தொழில்களில் புதிதாக உருவாகியிருந்த முத லாளித்துவ வர்க்கத்திடம் இத்தொழிலாளர் கள் தங்கள் ஜீவனத்திற்காகத் தங்கள் உழைப்பு சக்தியை விற்றனர்.

சுகுமால் சென் சுட்டிக்காட்டுவதுபோல், தொழில் மையங்களில் மிகவும் மோசமாக இருந்த நிலைமைகள், தொழிலாளர்களை, தங் களது பிரதான எதிரி இந்த எந்திரங்கள்தான் என்றும், எந்திரங்களை நிர்மூலமாக்குவதன் மூலம்தான் தாங்கள் சுரண்டப்படுவதைத் தடுத்திட முடியும் என்றும் நினைக்க வைத்தன. 1752இல் தொழிற்சங்கங்கள் மெல்ல மெல்ல உருப்பெறத் தொடங்கின. ஆனால் வளர்ந்து வரும் தொழிற்சங்க இயக்கத்தை நசுக்கிடக் கூடிய வகையில் தொழிலாளர் விரோத சட் டங்களும் (யவேi-உடிஅbiயேவiடிn டயறள) இயற்றப்பட் டன. தொழிலாளர் வர்க்கத்தை விரிவான அள வில் ஒன்றுதிரட்ட 19ஆம் நூற்றாண்டின் மத் தியவாக்கில் உருவான சாசன இயக்கம் எப் படியெல்லாம் உதவியது என்பதை ஆசிரியர் இந்நூலில் நன்கு சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி வெற்றி யடைந்ததை அடுத்து, தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு ஒரு புதிய தொலைநோக்குப் பார்வை கிடைத்தது. சுகுமால் சென், இரு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத் தில், சிவப்பு சர்வதேச தொழிலாளர் சங்கங் கள் (சுஐடுரு-சுநன ஐவேநசயேவiடியேட டிக டுயbடிரச ருniடிளே) ஆற் றிய பங்களிப்பினை மிகவும் விரிவான வகை யில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சுகுமால் சென் இந்நூலில் இரு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத் தில் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெ ரிக்க கண்டங்களில் அப்போது காலனிகளாக இருந்த நாடுகளில் வளர்ந்து வந்த தொழிற் சங்க மற்றும் அரசியல் இயக்கங்கள் குறித்தும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்நாடுக ளில் தொழிற்சங்க இயக்கங்களும் தேசிய விடுதலை இயக்கங்களும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக ஒத்துழைப்பு நல்கி முன்னேறிக் கொண்டிருந்தன. மேலும் தொழி லாளர் வர்க்க இயக்கத்தில் சோசலிச சிந் தனை வளர்ச்சி வலுவாக வளர்ந்து வந்ததை யும் உய்த்துணர்ந்திருக்கிறார். இந்தியாவில் இத்தகு வளர்ச்சிப்போக்கு இருந்ததை ஆசிரி யர் சிறப்பு அழுத்தம் கொடுத்து விவரித் திருப்பது இயற்கையே.

செம்படையின் வீரஞ்செறிந்த போராட்டம் தான் பாசிசத்தை துடைத்தெறிந்து, கிழக்கு ஐரோப்பிய நாடுகளை விடுவித்து, அங்கெல் லாம் மக்கள் ஜனநாயக அரசாங்கங்களை அமைத்தது. இது, உலக வரைபடத்தைக் கணிசமான அளவிற்கு மாற்றி, தொழிற்சங்க இயக்கத்தில் ஒற்றுமைக்கு ஆதரவான நிலை மையினை உருவாக்கியது.

இந்தப் புத்தகம் 1949இல் சீனாவில் நடை பெற்ற புரட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டம் மற்றும் கொரியப் புரட்சியின் வெற்றி ஆகியவை எப்படி உலகப் புரட்சிகர இயக்கத்திற்கு உதவியாக இருந்தது என் பதை விளக்குகிறது. கியூபா புரட்சியின் வெற்றி உலக அளவில் தொழிலாளர் வர்க்க இயக்கத் தினை மேலும் வலுப்படுத்தியது. உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் உலகின் பல முனைகளிலும் புரட்சிகரத் தொழிலாளர் வர்க்க இயக்கம் மேற்கொண்ட உறுதியான போராட்டங்களின் மூலம் வலுப்பட்டது.

சம்மேளனம் மீண்டும் போர்க்குணமுடையதாக மாறுதல்

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம், 2005 டிசம்பரில் ஹவானாவில் நடைபெற்ற தன்னுடைய 15-வது மாநாட்டுக்குப்பின் எப்படி மீண்டும் போர்க்குணமுடையதாக மாறியிருக்கிறது என்பதையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு குணாம்சத்தையும், வர்க்கப் போராட் டக் கொள்கையையும் தன்னுடைய அடிப் படை அணுகுமுறையாக எப்படி மீண்டும் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் ஆசிரியர் விளக்குகிறார். தற்சமயம் உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் தலை மையகம் பிரேக்கிலிருந்து ஏதென்ஸ் நகருக்கு மாறியிருக்கிறது. மேலும் தன் நடவடிக்கை களைப் புதுப்பித்திடவும் துல்லியமான நட வடிக்கைகளை சம்மேளனம் எடுத்திருக்கிறது.

உலகத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் தற்போது ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதி ரான போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் எடுக்கத் தொடங்கியிருப்பதை, சுகுமால்சென் இப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். சம்மேளனம் இயங்குவதற்கான வாய்ப்பு வசதிகள் மிகவும் குறைந்த நிலையில் இருந்தபோதிலும், உல கம் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் இன் றைய தினம் மிகவும் நம்பிக்கையுடனும் தீர் மானகரமான உறுதியுடனும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

புத்தகத்தின் இறுதியில், தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு ஒரு சமூகத் தொலை நோக்குப் பார்வை இருக்க வேண்டியன் அவ சியத்தை சுகுமால் சென் அடிக்கோடிட்டிருக் கிறார். முதலாளித்துவ அமைப்பு தனக்கேற் பட்டுள்ள கடும் உலகப் பொருளாதார நெருக் கடியின் காரணமாக வீழப்போவது உறுதி என்று ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். உலக வங்கி - சர்வதேச நிதியம் ஆகியவற் றின் கட்டளைகளின் மூலமாக, உலக முதலா ளித்துவம் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க் கைத்தரத்திற்கு எதிராகக் கடுமையான தாக் குதல்களைத் தொடுத்திருக்கின்றன. ஆயி னும், உலகத் தொழிலாளர் வர்க்கம் தங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலை எதிர்த்து முறியடித்து, உலக முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்புவதில் முன்னணிப் பாத் திரம் வகிக்கும் என்று மிகவும் நம்பிக்கை யுடன் சுகுமால்சென் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

உலகத்தொழிற்சங்க இயக்கத்தில் நடை பெற்ற பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிப் போக்கு களை சுகுமால்சென் இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். உலகம் முழுதும் உள்ள தொழிற்சங்க முன்னணி ஊழியர் கையிலும் இருக்க வேண்டிய முக்கிய புத்தகமாக இது திகழ்கிறது.

இவ்வாறு, சுகுமால் சென் எழுதியுள்ள சர் வதேச தொழிலாளர் வர்க்க இயக்கம் என்னும் நூல் தொழிற்சங்க இயக்க இலக்கிய வரிசை யில் மேலும் ஒரு மதிப்புமிக்க அணிசேர்க்கை யாக விளங்குகிறது.

தமிழில்: ச.வீரமணி

No comments: